(ஹுஸைன்)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் எல்லை நகரில் வியாழக்கிழமை இரவு ஊருக்குள் நுழைந்த முதலை ஒன்றை ஊர் மக்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
தற்போதைய வறட்சியான சூழ்அநிலையில் சுற்றிலும் நீர் குட்டைகளோ குளங்களோ இல்லாத நிலையில் இந்த முதலை எவ்வாறு ஊருக்குள் நுழைந்தது என்பது புரியாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
சுமார் 4 அடி நீளமுள்ள இந்த முதலையை பிடித்துக் கட்டி வைத்த பின்னர் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்தள்ளனர்.
இந்த முதலையை வனவிலங்குள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடத்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்
















