கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட,
வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார்.
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கல்முனை வடக்கு வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்றுமொரு வைத் தியசாலைக்கு மாற்றுவதற்கு முன் னாள் சுகாதார
இராஜாங்க அமைச்சர், ஹசன் அலியினால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்முனை வடக்கு வைத்தியசாலை பகுதி மக்களால் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒரு அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கப்பட்டிருப்பின் அதனை மற்றுமொரு வைத்தியசாலைக்கு மாற்ற முடியாது எனக் கூறிய நான், இவ்விடயம் தொடர்பாக நாம் பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தேன். ஆனால் மேலதிக எந்த நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ளவில்லை. இதனையே நான் திருக்கோவிலில் நடைபெற்ற கூட்டத்திலும் தெளிவாகக் கூறினேன்.
ஆனால் கல்முனை அஷ்ரப் வைத் தியசாலைக்கு ஒதுக்கியதாகக் கூறப்படும் நிதியை என்னால் மாற்றப்பட்டதாக திரிவுபடுத்தி சில ஊடகங்களும் சில கட்சியினரும் என் மீது சேறுபூசும் செயற்பாட்டை முன் னெடுத்துள்ளதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் குறையாகக் காணப்படும் விபத்துப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட சகல பிரிவுகளுக்கும் தேர்தல் முடிந்ததும் ஒரு வருட காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றித் தர முழு நடவடிக்கையும் மேற்கொள்வேன்.
எனினும் அம்பாறை மாவட்டத் தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு
தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை என் மீது சேறு பூசுவதன் மூலம் நிவர்த்திக்க முடியுமென ஹசன் அலி போன்றோர் கருதுவது வெற்றியளிக் காது. நான் ஒரு இனவாதியல்ல. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை ஒரே சமமாக கருதி செயற்படுபவன். கடந்த கால அரசின் போது பலம்பொருந்திய அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமால் முழுமையாக கைவிடப்பட்டிருந்த இந்த கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை, அபிவிருத்தியை இனியும் செய்வார்களா? எனவும் அவர் சவால் விடுத்தார்.
கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையின் சகல குறைபாடுகளை அப்பகுதி மக்களின் ஆலோசனைக ளைப் பெற்று நிவர்த்தி செய்வேன் என்றும் கூறினார்.













