DFCC வர்த்தன வங்கியினால் வர்த்தக சங்க தலைவர் தேசபந்து மு.செல்வராஜா கௌரவிப்பு

(SATHEESH) மட்டக்களப்பைச் சேர்ந்த தொழிலதிபர் தேசபந்து மு.செல்வராஜா அண்மையில் மட்டக்களப்பு நகர வர்த்தக சங்க தலைவராக தெரிவாகியிருந்தார்.
புதிய வர்த்தக சங்க தலைவராக தெரிவான இவரை கௌரவிக்கும் வைபவம் DFCC வர்த்தன வங்கியினால் நேற்று வியாழக்கிழமை 23ம் திகதி  மட்டக்களப்பு DFCC வர்த்தன வங்கி மண்டபத்தில் வங்கி முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது DFCC வர்த்தன வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு நகர வர்த்தக தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் பெருமைகொண்டதும், மட்டக்களப்பின்  முத்து என அழைக்கப்படுவது,  ஈஸ்ட் லகூண் ஹோட்டல் ஆகும். இதன் உரிமையாளர் தொழிலதிபர் தேசபந்து மு.செல்வராஜா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.