(சிவம்,வரதன் ) பாடும்மீன் கிறிக்கட் சமர் என வர்ணிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் அணியினரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (02) கல்லூரியில் நடைபெற்றது.மட்டக்களப்பு நகர மணிக்கூட்டக் கோபுரத்திலிருந்து அணியினர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சான்றிதழ்கள் வழங்கியதோடு பதக்கங்களும் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
பணப்பரிசாக ஆட்டநாயகனுக்கு ரூபாய் 50,000 மற்றும் அணியினைச் சேர்ந்த ஒவ்வோரு விளையாட்டு வீரருக்கும் தலத ரூபாய 5,000 வீதம் வழங்கப்பட்டன.
இதன்போது விளையாட்டத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட ஒருதொகுதி கிறிக்கட் உபகரணங்கள் பயிற்றுவிப்பாளரிடம் வழங்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் ஆர். வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார், பழைய மாணவர் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவி முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.
இப்போட்டிக்கு தேசிய அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை ரூபாய் 250,000 வழங்கி அனுசரணை வழங்கியதோடு வெற்றி பெற்ற அணியினர் இன்று மதிய உணவை சத்துருக்கொண்டான் விசேட தேவையுடைய சிறுவர்களுடன் இணைந்து உட்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






















