மட்டக்களப்பு - முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் 44வது ஆண்டு விளையாட்டு போட்டி ஆரம்பம்

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு  - முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் 44வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக கழகத்தின் ஏற்பாட்டில் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியுடன் பரிசளிப்பு விழா நிகழ்வும் இன்று காலை முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கே.சிவனேசராசா தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வின் நாளை ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் பரிசளிப்பு நிகழ்வுகளுடன் நிறைவுபெறவுள்ளது.

வருடாவருடம் இப் போட்டி நிகழ்வினையும் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வினையும் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தினர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.