மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் 45வது இலக்கியச் சந்திப்பில் நீங்களும் பங்குபற்றலாம் ! அறிவித்தல்.

கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் களமாக அமைய இருக்கும் 45வது இலக்கியச் சந்திப்பு எதிர்வரும் 22, 23 ம் திகதிகளில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் அமைந்திருக்கும் சர்வோதய நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் துறைசார் நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் பிரதான இடத்தினைப் பெற இருக்கின்றன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கலைஞர்கள், துறைசார் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்கின்றனர். இதுதவிர கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுக்கின்றனர். அனுமதி இலவசம்.