கல்லடி வேலூர் சமூக மேம்பாட்டுக் கழகத்தினரின் ஏற்பாடில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கு 09 - 08 - 2015 ஞாயிற்றுக்ககிழமை கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேயற்சி மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றல் , இறைவழிபாடு மற்றும் ஆசியுரையுடன் ஆரம்பித்ததுடன் விரிவுரையாளர்களாக திரு. மு . இன்பராஜா மற்றும் திரு. த . அம்பலவானர் ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
திரு. கமலராஜ் சர்மா அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வின்போது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடி வினாத்தாள் வளங்கப்பட்டு விரிவுரைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின்போது கல்லடி வேலூர் சமூக மேம்பாட்டுக் கழக தலைவர்
திரு.த. நகுலேஸ்வரன், செயலாளர், உறுப்பினர்கள் மங்கல விளக்கேற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரிய, மாணவர்களையும் படங்களில் காணலாம்.












