சுயேட்ச்சைக் குழு - 26 தேர்தல் விஞ்ஞாபனம் | மீன் பாடும் தேன் நாட்டு தமிழ் மக்களின் எழுச்சிக்கான மாற்றம்

அன்பார்ந்த இனிய தமிழ் மக்களே கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் சின்னபின்னமாக்கப்பட்டுள்ளது. இவ் யுத்தத்தினால் எமது மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து உடமைகளை பறிகொடுத்து தாய் தந்தையர் மகன் மகளை இழந்து தமிழ்பெண்கள் கணவனை இழந்து விதவையாக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் எமது மாவட்ட தமிழ் மக்களேயாவர். ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் கல்வி பயிலும் நலையில் இருந்து பின்தள்ளப்பட்டு சாபக்கேடான ஒரு வாள்வாதாரம் மூலம் சின்னாபின்னம் ஆக்கப்பட்டதனால் எல்லோருடைய எதிர்காலமும் பாதிக்கப்பட்டது. எனவே நம் தமிழ் மக்களடைய முன்னேற்றத்திற்கான வழிவகைகளை தேடுவதற்கான திட்டங்ளை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

அன்பார்ந்த மக்களே! கடந்த யுத்தத்தினால் பல தொழிற்சாலைகள் சேதடைந்துள்ளன மேலும் பல தொழிற்பேட்டைகள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. அவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள்ளேன். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகட்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன்வந்துள்ளேன்.

வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன்

• தேசிய கடதாசி ஆலையை புனரமைப்பு செய்தல். இதன் மூலம் 3500 பேருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கலாம்.
• கும்புறுமூலை அரச அச்சகத்தை மீளகட்டி செயலாற்றுவதன் மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தல்.
• சித்தாண்டி கோழித்தீன் தொழிற்சாலையை ஆரம்பிப்பதன் மூலம் 400 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தல்.
• கரடியனாறு அரச விவசாயப் பண்ணயையும் விவசாய தொழிநுட்பக் கல்லூரியையும் மீளமைப்பு செய்வதன் மூலம் 800 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தல்.
• இலுப்படிச்சேனை, வாகரை, மண்டூர் ஓட்டுத்தொழிற்சாலையை மீள் கட்டயெழுப்புவதன் மூலம் தலா 1000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தல்.
• மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கொம்மாதுறை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களில் ஆடைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் 3000 பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தல். விசேடமாக வீட்டு சுமையை தாங்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தல்.
• வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வெருகல் கங்கை நீரை அணைக்கட்டு கட்டி வாய்க்கால் அமைத்து முதற்கட்டமாக பனிச்சங்கேணி வரை திசை திருப்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களில் இரு போகம் நெற்செய்கை செய்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்தல்.
• வாகரை பிரதேச சபை பிரிவில் தொழிநுட்ப கல்லூரியை அமைத்து அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்தல்.
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவைகளில்,
• மண்முனை துறையடி வீதியை மங்களகமவுடன் இணைத்து அபிவிருத்தி செய்து காடுகளை துப்பரவு செய்து மக்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• வாகரை பிரதேச சபை பிரிவில் தொழிநுட்ப கல்லூரியை அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
• மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் பொலிசார் தமிழ் மக்களுக்கு சொந்தமான 30 வீடுகளில் நீண்டகாலமாக இருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை DIG மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
• மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம வீதிகளை திருத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
• மட்டக்களப்பு மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசலைக்கு சொந்தமான காணி 1500 ஏக்கர் மக்களின் அபிவிருத்தி வாழ்வாதார தவைக்கு பயன்படுத்தப்படும்.
எனவே அன்பார்ந்த இனிய தமிழ் மக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை எனது சுயேட்சை குழு 26 இன் மாம்பழச்சின்னத்திற்கு புள்ளடியிட்டு எனது இலக்கம் 4 ற்கும் புள்ளடியிட்டு பாராளுமன்றிற்கு உங்களில் ஒருவனான என்னை அனுப்புவதற்கு மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தருமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றேன்.

வி.கணேசானந்தம்
(ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்)