(ரேவநிசாந்)
தட்சண கைலாயம் என சிறப்புற்று விளங்கும் ஈழமணித் திருநாட்டின் மட்டக்களப்பின் மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் பெரியகுளநீர் நிலையும் சுற்றிவர தென்னந் தோப்புகளும் முக்கனிவகைகளும் இயற்கையில் அமையப்பெற்ற திருநீற்றுக் கேணியும் கொண்டு விளங்கும் கண்ணகி புரத்தில்அமர்ந்திருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரங்களை அள்ளி வழங்கி கொண்டிருக்கும் கண்ணகிபுரம் கருணை விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது நிகழும் மன்மத வருடம் ஆடித்திங்கள் 24ம்நாள் 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சாந்தி கருமங்களுடன் ஆரம்பமாகி ஆடித்திங்கள் 29ம்நாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை காலை ஆடி அமவாசை தீர்த்த உற்சவம் இடம்பெற்று15.08.2015 சனிக்கிழமை இரவு வைரவர் பூசையுடன் உற்சவம் நிறைவுறும்
உற்சவகால நிகழ்வுகள்
- 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை கர்மாரம்பநிகழ்வுகள் தொடர்ந்து விசேடபூசைகள் இடம்பெறும்.
- 10.08.2015 திங்கட்க்கிழமை பகல் மகேஸ்வர பூசையும் இரவுப்பூசை 7 மணியளவில் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வருதல் நடைபெறும்
- 11.08.2015 செவ்வாய்க்கிழமை பகல் மகேஸ்வர பூசையும் மாலைபூசை 6மணியளவில் இடம்பெற்று சுவாமி ஊர்வலம் இடம்பெறும்
- 12.08.2015 புதன்கிழமை பகல் மகேஸ்வர பூசையும் இரவுப்பூசை 7 மணியளவில் இடம்பெற்று பூமாலை விற்றல் நிகழ்வு இடம்பெறும்.
- 13.08.2015 வியாழக்கிழமை மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 8 மணிக்கு பன்னீர் குடம் எடுத்துவரப்பட்டு அபிஷேக பூசைகள் மதியம் இடம்பெற்று இரவுப்பூசை 7 மணியளவில் இடம்பெறும்.
- 14.08.2015 வெள்ளிக்கிழமை காலை திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு அமவாசை திதியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மீண்டும் விசேட பூசைகளுடன் திருப்பொன்னூஞ்சல் ஆடல் மகேஸ்வரபுசை என்பன இடம்பெறும்.
- 15.08.2015 சனிக்கிழமை இரவு வைரவர் பூசையுடன் உற்சவம் நிறைவுறும்.














