(ரேவநிசாந்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்எருவில்பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனை கிராமத்தின் பிரதான வீதியானது மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றது.மகிழூர் தொடக்கம் மகிழூர்முனை வரையான பிரதான வீதியானது மிகவும் மோசமான முறையில் சேதமடைந்து காணப்படுகின்றது. கடந்த பலவருடங்களாக இவ்வாறான நிலையில் உள்ள போதிலும் இது தொடர்பாக எந்த அதிகாரிகளும் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை.
மகிழூர்முனை 110A, 110Bகிராமங்களில் வசிக்கும் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அன்றாட தேவைக்காக இவ்வீதியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பாடசாலை செல்லும்மாணவர்கள், ஏனைய பணிகளுக்கு செல்லும் தொழிலாளிகள், பாதசாரிகள் ,கிராமமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கின்றனர். அதுமட்டுமின்றி கடந்தகாலங்களில் பாதையின் மோசமான நிலையினால் பாரியவிபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் நடந்த சம்பவங்களும் குறிப்பிடத்தக்கது.
இங்கு வாழும் மக்கள் தங்களது முழுத்தேவைக்கும் இவ் வீதியை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள மக்களின் நலனை கருத்திற் கொண்டு இவ்வீதியை செப்பனிட்டு தருமாறு உரிய அதிகாரிகளை கிராம மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

















