கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் பிரதம குரு சிவஸ்ரீ எஸ். ராமதாஸ் குருக்கள் தலைமையில் பூஜை இடம்பெற்று பின்பு பட்டெடுத்துச் செல்லும் வீதி உலா நடைபெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்க கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ,ஒயிலாட்டம் என்பனவற்றோடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியிலே சிறார்களினால் பட்டு மற்றும் மாலைகளைச் சுமந்த வண்ணம் மாமாங்கேஸ்வரரின் சன்னிதானம் நோக்கி பிரதான வீதி வழியாகச் சென்றது.
தொடர்ந்து மாமாங்கப் பிள்ளையாருக்கு ஆலய பிரதம குரு சிவப்பிரமஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியாரினால் விஷேட பூசைகள் இடம்பெற்றதுடன் வீதியுலாவும் மிக சிறப்புடன் இடம்பெற்றது.
பிதிர்க் கடன் தீர்க்கும் ஆடி அமாவாசைத் தீர்த்தம் எதிர்வரும் 14.08.2015 வெள்ளிக்கிழமை மாமாங்கேஸ்வரரின் தீர்த்தக்குழத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













