ப.ராஐதிலகனின் 'இருவேறு அரங்குகளின் இரு ஆளுமைகள்' நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்


ப.ராஐதிலகனின் 'இருவேறு அரங்குகளின் இரு ஆளுமைகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மு.ப 9.30 மணிக்கு குருக்கள் மடம் கலைவாணி மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறும். திருவாளர் வி.கௌரிபாலன் நிகழ்வினை தலைமைதாங்கி நடத்துவார். நூல் வெளியீட்டிற்கு பிரதம அதிதிகளாக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், மற்றும் நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் ஆகியோர் கலந்து சிறப்பிப்பர்.

அத்துடன் கௌரவ அதிதிகளாக குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய அதிபர் திரு.க.செல்வராசா அவர்களும் மட்டுநகர் இந்துக் கல்லூரி அதிபர் திரு க.அருட்பிரகாசம் அவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். மேற்படி நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் , கலைஞர்கள் அனைவரிற்கும் ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுப்பதோடு நூற் பிரதியினையும் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

இளம் எழுத்தாளரும் கலைஞருமான ப.ராஐதிலகனின் படைப்புலக பிரவேசத்திற்கு எமது வாழ்த்துக்கள்.