சுவீஸ் உதயம் அமைப்பினால் புணானை மயிலந்தனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு


(சா.நடனசபேசன்)
யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக சுவீஸ் உதயம் அமைப்பின் நிதி உதவியின் மூலம் புணானை மயிலந்தனைக்கிராமத்தில் நடைபெற்று வருகின்ற மாலைநேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவீஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் சமூகசேவையாளருமான க. துரைநாயகம் தலைமையில் வியாழக்கிழமை 20 திகதி இடம்பெற்றது.
சுவீஸ் உதயம் அமைப்பு கிழக்குமாகாணத்தில் பல்வேறு உதவிகளைச்செய்து வருகிறது.

அதில் ஒரு அங்கமாக புணானை மயிலந்தனைக்கிராமத்தில் 2011 ஆம் ஆண்டில் இருந்து இவ்வகுப்புக்கான அனைத்துச்செலவுகளையும் பொறுப்பெடுத்து சுவீஸ் உதயம் நடாத்தி வருகிறது
இந்த வகுப்பில் கற்கும் மாணவர்களையும் அக்கிராமத்து மக்களையும் பார்வையிடுவதற்காக சுவீஸ் நாட்டில் இருந்து வருகைதந்த அவ் அமைப்பின் பொருளாளர் துரைநாயகம் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று அம்மாணவர்களைச் சந்தித்ததுடன் அவர்களுக்கு கற்றல் உபகரணத்தையும் வழங்கியுள்ளர்
இந்நிகழ்வில் சுவீஸ்உதயத்தின் கிழக்குமாகாணக் கிளைத்தலைவர் மு.விமலநாதன் பிரதித்தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் மற்றும் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களான க.புவனேஸ்வரி க.ஜெயந்தி ஆகியோர்களும் கலந்துகொண்டனர்