மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி அருள்மிகு ஸ்ரீ சிவ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று 29ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த 24ம் திகதி ஆரம்பமான வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் இரவுப் பூசை நேற்று 28ம் திகதி இரவு மிக சிறப்புடன் இடம்பெற்றது. இன்று தீர்த்தோற்சவம் நிறைவுபெற்றதும் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.