இன்றைய தேர்தல் தினத்தில், கட்டாயமாக வாக்களிக்க முயற்சிக்குமாறு, 'கபே' மற்றும் 'பப்ரல்' கண்காணிப்பு அமைப்புக்கள், வாக்காளர்களை கேட்டுள்ளது.
வாக்களிக்காவிட்டால் , விருப்பமில்லாத கட்சியையும் ,விருப்பு வாக்கை அளிக்காவிடில் , விருப்பமில்லாத வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க காரணமாக அமையும் , என இவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
வாக்களிக்காவிட்டால் , விருப்பமில்லாத கட்சியையும் ,விருப்பு வாக்கை அளிக்காவிடில் , விருப்பமில்லாத வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க காரணமாக அமையும் , என இவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
ஆகவே, காலையிலேயே வாக்களிப்பு சாவடிகளுக்கு சென்று ,தமக்கு விருப்பமான அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதுடன்,விருப்பமான வேட்பாளரையும் ,தெரிவு செய்து வாக்களிக்குமாறு, இத்தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன.எந்தக்கட்சிக்கு வாக்களிப்பதாயினும் ,நல்ல 225 பேரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புமாறும் இவ்வமைப்புக்களின் தலைவர்களான கீர்த்தி தென்னேகொன் மற்றும் ரோகன ஹெட்டி ஆராச்சி ஆகியோர் வேண்டி உள்ளனர். உத்தியோகபூர்வ அடையாளஅட்டைகள் இல்லாவிடிலும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய முறையை பாவித்து வாக்குகளை அளிக்குமாறும், அதற்கிணங்க 2 ௦௧௪ சுற்றுநிருபத்தின்படி வேண்டும் என்றும், நபரொருவர் 2௦15 ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்திருப்பின், அதை உறுதிப்படுத்துவதன் மூலம் இம்முறை தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும் இவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம்,கடவுச்சீட்டு,வண.குருமார்களின் அடையாள அட்டை,முதியோர் அட்டை,ஓய்வுதிய அடையாள அட்டை,தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, ஆகியவற்றை பாவிக்கலாம்.













