சிகை அலங்கரிப்பு நிலையம் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை!

சிவம் -

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலைதீவில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் நேற்று திங்கட்கிழமை இரவு (24) கொள்ளையிடப்பட்டள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

வழமைபோல் நேற்று முன்தினம் (24) மாலை 6.00 மணியளவில் உரிமையாளர் முடிவிட்டுச் சென்று நேற்று செவ்வாய்க்கிழமை (25) காலை 8.00 மணியளவில் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.


கடையின் உள்சென்று பார்த்தபோது அலுமாரியில் உள்ள பணம் ரூபாய் 14,500 , ரூபாய் 50,000 பெறுமதியான 4 முடி திருத்தும் மெசின்கள்,6 கத்திரிகள், 500 சவரம் செய்யும் அலகுகள் உட்பட அழகுசாதனப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அவதானித்து பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

குற்றம் நடந்த இடத்தை அவதானக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கே. ரவிச்ந்திரன் தலைமையில் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த சலூணில் 3 ஆவது தடவையாக திருட்டு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.