கண்ணகிபுரம் கருணை விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பன்னீர்குட பவனி நிகழ்வு

(ரேவநிசாந்) 
திருமூலரால் சிவபூமி என போற்றப்பட்ட  ஈழமணித் திருநாட்டின் மட்டக்களப்பின் மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் பெரியகுளநீர் நிலையும் சுற்றிவர தென்னந் தோப்புகளும் முக்கனிவகைகளும் இயற்கையில் அமையப்பெற்ற திருநீற்றுக் கேணியும் கொண்டு விளங்கும் கண்ணகிபுரத்தில் அமர்ந்திருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரங்களை அள்ளி வழங்கி கொண்டிருக்கும் கண்ணகிபுரம் கருணை விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 5ம் நாளான 13.08.2015 வியாழக்கிழமை அன்று சிறப்பு நிகழ்வாக பன்னீர்குட பவனி இடம்பெற்றது.
மேலும்  மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தில்  இருந்து பன்னீர்குடபவனி எடுத்துவரப்பட்டு கண்ணகிபுரம் கருணைவிநாயகர் ஆலயத்தை அடைந்ததும் தொடர்ந்து  அபிஷேக பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது.  இதில் பலநூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிவர்த்தி செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.