மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் 28ம் திகதி வௌ்ளிக்கிழமை இடம்பெறுறவிருக்கும் திருவிழா ஜெயந்திபுரம் மற்றும் கருவேப்பங்கேணி வாழ் மக்களால் நடாத்தப்படவிருக்கின்றது.
29ம் திதி சனிக்கிழமை அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெறும். தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறும்.
திருவிழாவிலும் பூசையிலும் கலந்துகொண்டு குமாரத்தன் முருகப்பெருமானின் அருளைப் பெறுமாறு அனைவரையும் ஆலய நிருவாகத்தினர் அழைக்கின்றனர்.


















