த தே கூட்டமைப்பினர் பணத்துக்கோ சலுகைகளுக்கோ சோரம் போகாதவர்கள் - தமிழினத்தின் விடிவுக்காக உழைப்பவர்கள் ; பொன்.செல்வராசா

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஆதரிப்து என மட்டக்களப்பில் தமிழ் மக்கள் தீர்மானித்துள்ளார்கள். இதனால் இங்கு போட்டியிடும் ஏனைய தேசிய கட்சிகளும்கும் எமக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

அவரின் அலுவலகத்தில் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் பேசுகையில்,

இத் தேர்தல் எமக்கு மிக முக்கியமானதொன்றாகும். இதில் வேற்றுக் கட்சிக்கு வாக்களித்தால் அது வேற்று இனத்தவரையே எம்.பி யாகக் கொண்டுவரும். எமது தமிழ் இனத்திற்கு வேற்று இனத்தவர் தலைவராக வருவதை எம்மால் ஏற்றுக்கொள்முடியாது.

இதனை எமது மக்கள் நன்கு விளங்கியிருப்பார்கள் என நான் நினைக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பணத்துக்கோ சலுகைகளுக்கோ சோரம் போகாதவர்கள்.அவர்கள் என்றும் தமிழினத்தின் விடிவுக்காக உழைப்பவர்கள்.

மக்கள் அனைவரும் வாக்குகளை சரியாக அளிக்கவேன்டும். விளங்கம் போதாத மக்களுக்கு விளங்கிக் கொண்டவர்கள் விளங்கப்படுத்தவும்.

தூர இடங்களுக்கு தொழிலுக்கு சென்றிருந்தால் வாக்களிக்கும் அன்றைய தினத்தை சேவை நாளாக நினைத்து இங்கு வந்து வாக்களிக்கவும்.

நாம் ஒற்றுமையுடன் இருப்பதே எமக்கு பலம். நமது ஒற்றுமையை உடைப்பதற்கு பல சதித் திட்டங்கள் நடைபெறுகின்றது.  எது எவாறவாறு இருந்தாலும் எமது இலக்கு மாறாமல் பயணிக்கவேன்டும்.  அப்போது வெற்றி நிச்சயம்.

என தெரிவித்தார்.