(படுவான் பாலகன்) பண்டாரியாவெளி ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய குடமுழுக்கு பெருஞ்சாந்தி அருட்புனல் நன்னீராட்டு விழா ஜீர்நோத்தாரண அஷ்டபந்தன ஏக குண்ட நூதன பிரதிஷ்டா மகா கும்பாவிஷேக கிரியைகள் கடந்த 17ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்தது. நாளை(20) வியாழக்கிழமை காலை 06.00மணி தொடக்கம் மாலை 04.30மணி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று மகா கும்பாவிசேகம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மண்டலாபிசேக பூசைகள் இடம்பெற்று 02.09.2015ம் திகதி சங்காபிசேக நிகழ்வுடன் நிறைவு பெறவிருக்கின்றது.
கிரியைகள் அனைத்தும் விஸ்வ பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.














