விசாய அபிவிருத்தி மூலம் வறுமையைக் குறைத்தல் எனும் தொனிப்பொருளில் வாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நாவலடி வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியினால் 9 மீனவர்கள் தெரிவு செய்யப்பட்டு 9 கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம 17 ஆம் திகதி 370 கொடுவா மீன் குஞ்சுகள் கூண்டுகளில் இடப்பட்டு 4 மாதங்களான நிலையில் தற்போது 300 மீன்களே உள்ளதாகவும் ஒரு மீனின் நிறை தற்போதய நிறை 750 கிராம் எனவும் அறுவடைக்காலத்தின்போது (6 மாதங்களின் பின்பு) 1500 கிராம் நிறை வரை காணப்படும் என மீன் வளர்பாளர்களான க. அருள்நாதன் மற்றும் அ. சுபராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
வளர்ப்பு மீன்களுக்கான உணவுகளை தாங்கள் வலை மூலம் ஆற்றினுள் வீசிப்பிடிப்பதாகவும் ஒருநாளைக்கு மீன்களின் இரைக்காக ஒவ்வோரு மீனவரும் தலா சராசரி ரூபாய் 300 செலவிடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
6 மாதத்தின் ;பின்பு அறுவடையின்போது ஏற்றுமதி செய்யும் கம்பனிகள் தங்களிடம் ஒரு கிலா ரூபாய் 600 இற்று கொள்வனவு செய்வதாகவும் இதனால் தங்களிற்கு மொத்த வருமானமாக ஒரு மீனவருக்கு சராசரி இரண்டு இலட்சம் பெறப்படும் எனவும் தெரிவித்தனர்.












