கடந்த 18.07.2015 அன்று சுயேட்சை குழு 26 ன் முதன்மை வேட்ப்பாளர் வி.கணேசானந்தம் அவர்கள் ஆற்றிய உரைஅன்பார்ந்த உன்னிச்சை வாழ்மக்களே நான் கடந்த மார்ச் மாதம் இங்கே வந்திருந்த போது நீங்கள் என்னிடம் உங்கள் பிரச்சனைளை முன்வைத்தீர்கள் அதில் மிகவும் முக்கியமான பிரச்சனையாக இங்கே வாழ்கின்ற 18 கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது.
நீங்கள் உங்கள் குடிநீர் தேவைக்காக 3Km தூரம் வரை நடந்து சென்று குடிநீரைப் பெற்றுவருகின்றீர்கள். இதுசம்பந்தமாக உரியவர்களிடம் கதைத்து உங்களின் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியை செய்துள்ளேன். உங்கள் கிராமமான 8ம் கட்டையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்து அங்கிருந்து இங்குள்ள 18 கிராமங்களுக்குமான நீரை குழாய் மூலம் வழங்குவதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் உரிய நீர்த்தேவை உன்னிச்சை குளத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மக்களுக்கான நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. நமது சகோதர இனமான முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடி பிரதேசத்தின் முற்றுமுழுதான நீர்த்தேவை உன்னிச்சை குளத்திலிருந்தே பூர்த்தசெய்யப்படுகிறது.
இதற்கு யார் காரணம் முன்னிருந்த 3 தழிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நமது மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருப்பார்களா? மாறாக தமிழ் தேசியம் மாத்திரம் பேசிக்கொண்டு திரிவதால் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நம்மக்கள் இன்னும் பின்னடைவையே சந்திக்கிறார்கள். இன் நிலை தொடருமானால் நம் சமூகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
எனவே அன்பார்ந்த மக்களே மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து நமது அபிவிருத்தியை இல்லாமல்செய்யப் போகிறீர்களா? மற்றும் தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியகட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போன்ற தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து நமது விலைபோகும் அரசியல்வாதிகள் மூலம் முஸ்லிம் அரசியல்வாதிளை பாராளுமன்றம் அனுப்ப போகிறீர்களா?
எனவே வரும் 17ம் திகதி சிந்தித்து வாக்களியுங்கள் எனது சின்னமாகிய மாம்பழத்திற்கும் 4 ம் இலக்கத்திற்கும் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் நமது மாவட்டத்தில் பல மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளது. நமது மாவட்டம் தழிழ் தலமையின் கீழ்செயற்பட வாக்களியுங்கள் நமது தேவைகளை பூர்திசெய்ய அரசுடன் பேரம்பேசி பெற்றுக்கொள்ள எனக்கு வாக்களியுங்கள்.






















