தமிழ் கூட்டமைப்பு சாதித்தது என்ன? தமிழர் மகாசபை

தம்­பி­யப்பா கோபா­ல­கி­ருஸ்ணன் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய கலை இலக்­கிய சமூக அர­சியல் செயற்­பாட்­டாளர். கவிஞர் - எழுத்­தாளர் - விமர்­சகர் - ஆக்க இலக்­கி­யப்­ப­டைப்­பாளி சிற்­றி­த­ழாளர் எனப் பல்­து­றை­களில் ஈடு­பட்டு உழைப்­பவர். செங்­கதிர் எனும் இலக்­கிய சஞ்­சி­கையின் ஆசி­ரியர். செங்­க­திரோன் எனும் புனை­பெ­யரில் தமிழ் இலக்­கிய உலகில் அறி­யப்­பட்­டவர்.

1977 இல் இருந்து அர­சி­யலில் நேர­டி­யாகத் தன்னை ஈடு­ப­டுத்திக் கொண்­டவர். 1989, 1994 மற்றும் 2000 ஆண்டுப் பாரா­ளு­மன்றப் பொதுத் தேர்­தல்­களில் அம்­பாறை மாவட்­டத்தில் (திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்டம்) போட்­டி­யிட்­டவர். தற்­போது கலா­நிதி எந்­திரி கா.விக்கி­னேஸ்­வரனின் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழர் மகா­சபை எனும் பதிவு செய்­யப்­பட்ட (2006) அர­சியல் கட்­சியின் செய­லா­ள­ராகச் செயற்­ப­டு­கிறார். எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் தமிழர் மகா­சபை வட­கி­ழக்கின் அம்­பாறை (திகா­ம­டுல்ல) தவிர்ந்த அனைத்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யி­டு­கி­றது.


இது குறித்து அவரிடம் கேட்டோம்.

கேள்வி:: தமிழர் மகா­சபை ஆரம்­பிக்­கப்­பட்­டதன் நோக்கம் என்ன?
பதில்: யார் பிழை? யார் சரி? எது சரி? எது பிழை? என்ற வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு அப்பால் கடந்த எழு­பது வரு­ட­கால தமி­ழர்­க­ளு­டைய உரி­மைப்­போ­ராட்ட அர­சி­யலும் அந்த அர­சியல் பிர­ச­வித்த கடந்த முப்­பது வரு­ட­கால ஆயுதப் போராட்­டமும் இலங்­கையின் வடக்கு கிழக்குத் தமிழ் மக்­களை சர்­வ­தே­ச­ரீ­தி­யாகத் தனித் தேசிய இன­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யதைத் தவிர - அதற்­காக நாம் கொடுத்த விலை மிக­மிக அதி­க­மா­னது. உள்­நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு வேறு எந்த சமூக, பொரு­ளா­தார நன்­மை­க­ளையும் பெற்­றுத்­த­ர­வில்லை.
ஒரு சமூ­கத்தின் அர­சி­யல்­த­லை­மையின் அர­சியல் செயற்­பா­டுகள் அது பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூ­கத்தைச் சமூக பொரு­ளா­தார ரீதி­யாக மேம்­பா­ட­டையச் செய்­வ­தாக அமைதல் வேண்டும். ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தமிழர் அர­சி­யலில் அது­நி­க­ழ­வில்லை. கடந்த எழு­பது வரு­ட­கால அர­சி­யலில் தமி­ழர்கள் எய்­திய அடை­வுகள் குறித்த ஐந்­தொகைக் கணக்கு ஒன்­றினைக் காலம் கடந்­தா­யினும் பார்ப்­பது தமிழ் மக்கள் எதிர்­கா­லத்தில் செல்ல வேண்­டிய அர­சியற் திசையைத் தீர்­மா­னிக்க உதவும். இவ்­வா­றான ஐந்­தொகைக் கணக்கு ஒன்றின் நிகர இலாபம் என்­ன­வெனில் வடக்கு கிழக்குத் தமி­ழர்கள் பட்­டு­வேட்­டிக்குப் பாடு­பட்டு இறு­தி­யிலே இடுப்­பிலே கட்­டி­யி­ருந்த கோவ­ணத்­துண்­டையும் இழந்த நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். பிச்சை வேணாம் நாயைப்­பிடி எனும்­ப­டி­யாக அர­சி­யலில் பல­வீ­னப்­பட்­டுளோம். எனவே, செயற்­பாட்­டுத்­திறன் மிக்க தமிழ் அர­சியல் சக்­தி­யொன்றின் தேவை உண­ரப்­பட்­ட­தா­லேயே தமிழர் மகா­சபை தோற்றம் பெற்­றது.

கேள்வி: இன்­றைய சூழலில் இவ்­வா­றான ஒரு கட்சி தேவை­தானா?
பதில்: ஆம்! இப்­போ­துதான் கட்­டாயம் தேவை. வடக்கு, கிழக்குத் தமி­ழர்­களால் தேர்­தல்­களில் பெரும்­பான்­மை­யாக ஆத­ரிக்­கப்­பட்டு இன்று தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­படும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 2001 இல் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். 2004 பொதுத்­தேர்­தலில் 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாகிப் 14 வரு­டங்கள் கழிந்­து­விட்­டன. இவர்கள் இது­வரை சாதித்­தது என்ன? 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாவி­லாற்றில் ஆரம்­பித்து 2009 மே 18 அன்று முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முள்­ளி­வாய்க்­காலில் முடி­வுக்கு வந்த விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்கை ஆயு­தப்­ப­டை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்தப் பாதிப்­பு­க­ளி­லி­ருந்து அப்­பாவித் தமி­ழர்­களைக் காப்­பாற்ற யுத்தம் உக்­கி­ர­மாக நடந்­து­கொண்­டி­ருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த காத்­தி­ர­மான அர­சியற் செயற்­பா­டுகள் - இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கைகள் என்ன? யுத்தம் உக்­கி­ர­மாக நடந்து கொண்­டி­ருந்த போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தனக்கும் யுத்­தத்­திற்கும் சம்­பந்தம் இல்லை என்­ப­துபோல் இந்­தி­யாவில் தங்­கி­யி­ருந்தார். அப்­போது பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்த 22 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் போர் நிறுத்தம் வேண்டிப் பாரா­ளு­மன்றப் படிக்­கட்­டுக்­களில் அமர்ந்து சாகும்­வரை உண்­ணா­வி­ரதம் இருந்­தி­ருக்­க­லாமே? அது­தானே உண்­மை­யான அகிம்சைப் போராட்டம். போரா­டத்­தானே இவர்கள் மக்­க­ளிடம் வாக்குக் கேட்­ட­ார்கள்.
விரி­வஞ்­சியும் நல்­லெண்ணம் கரு­தியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் கையா­லா­காத்­த­னங்­களை நான் விப­ரிக்க இச்­சந்­தர்ப்­பத்தில் விரும்­ப­வில்லை. ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­லப்­போனால் அர­சி­யலில் மூன்­று­வ­கை­யுண்டு. தனி­ந­ப­ருக்­கான அர­சியல் - Politics for the individual கட்­சிக்­கான அர­சியல் Politics for the party, மற்­றது மக்­க­ளுக்­கான அர­சியல் - Politics for the people, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அதன் உரு­வாக்கக் காலத்­தி­லி­ருந்தே ஒரு கட்­சிக்­கா­னதும் அக்­கட்­சியின் தனி­ந­பர்­களின் நலன் சார்ந்­துமே செயற்­பட்­டு­வ­ரு­கின்­றதே தவிர மக்­க­ளுக்­கா­னதோர் அர­சி­யலை அது முன்­னெ­டுக்­க­வில்லை.
எனவே தேர்தலை மையப்­ப­டுத்­தாது மக்­க­ளை­ மை­யப்­ப­டுத்தும் அர­சி­யலை முன்­னெ­டுக்கக் கூடி­யதும் - தெளிவான அர­சியல் கோட்­பாட்­டுடன் அர­சி­யலில் உகந்த அணு­கு­மு­றையைக் கையா­ளக்­கூ­டி­யதும் மக்­களை அறி­வுபூர்­வ­மாக ஆற்­றுப்­ப­டுத்தக் கூடி­யதும் - கண்­ணியம் மிக்­கதும், மக்­க­ளுக்கு விசு­வா­ச­மா­கவும் நேர்மையா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் செயற்­ப­டக்­கூ­டி­யதும் - அர­சியல் அனு­பவம், ஆளுமை, ஆற்றல் மிக்­கதும் - மக்­களின் உணர்ச்­சி­களைத் தூண்­டி­விட்டு முரண்­பாட்டு அர­சி­யலைச் செய்­ய­வி­ரும்­பா­ததும் - தமிழ் மக்­க­ளி­டை­யே­யுள்ள கல்­வி­மான்­க­ளையும் துறைசார், தொழில்சார் நிபு­ணர்­க­ளையும் சமூகப் பற்­று­டைய தொழி­ல­தி­பர்கள் மற்றும் வர்த்­த­கர்­க­ளையும், கலை இலக்­கிய சமூக மற்றும் ஊடகச் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும், அர­சி­ய­லா­ளர்­க­ளையும் விவ­சா­யி­க­ளையும் தொழி­லாளி களையும் உள்­வாங்­கி­யதும் - சமூக, பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாகத் தமிழ் மக்­களைக் கைதூக்­கி­விடக் கூடி­யதும் - ஒரே­கு­ரலில் பேசக்­கூ­டி­யதும் - தந்தை செல்வா காட்­டிய வழியில் கட்­டுப்­பாட்­டு­டனும் ஐக்­கி­யத்­து­டனும் செயற்­ப­டக்­கூ­டி­ய­து­மான,
ஒரு மாற்று அர­சியல் சக்­தியைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை காலங்­க­டந்­தா­யினும் இப்­போ­துதான் மிக மிக அவ­சி­ய­மா­னது.
கேள்வி: தமிழ்­த் தே­சியக் கூட்­ட­மைப்­புடன் நீங்கள் ஏன் சேர்ந்து இயங்க முடி­யாது?

பதில்: யதார்த்­தபூர்­வ­மான கேள்வி. தமிழ் மக்­களின் ஐக்­கியம் கரு­தியும் உட்­சென்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தவ­று­களைத் திருத்த முடியும் என்ற நம்­பிக்­கை­யிலும் எமது கட்­சியின் தலைவர் கலா­நிதி கா.விக்­னேஸ்­வரன் யுத்தம் முடிந்த பின் 2009–2010 காலப்­ப­கு­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனைச் சந்­தித்து ஒரு பொது உடன்­ப­டிக்­கையின் கீழ் எமது கட்­சி­யான அகில இலங்கை தமிழர் மகா­சபை (அக்­கா­ல­கட்­டத்தில் அகில இலங்கை தமிழர் கூட்­டணி) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சேர்ந்து செயற்­பட வேண்­டுகோள் விடுத்தார். சம்­பந்தன் அதற்கு மறுத்­து­விட்டார்.

கேள்வி: எதிர்­கால வேலைத்­திட்­டங்கள் என்ன?
பதில்: எமது கட்­சியின் எதிர்­கால வேலைத்­திட்­டங்களானவன.
முதலில் எமது கட்சி எண்ணம் கொண்­டுள்ள உட­னடி மற்றும் குறு­கி­ய­கால வேலைத் திட்­டங்­களைப் பட்­டி­ய­லி­டு­கின்றேன்.
யுத்­த­கா­லத்தில் கண­வன்­மா­ரையும், உழைப்­பாளி ஆண்­மக்­க­ளையும் இழந்து அவ­தி­யுறும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்­பங்­களின் மறு­வாழ்வுத் திட்­டங்கள்.
பெற்­றோர்­களை இழந்த அநாதைப் பிள்­ளை­களின் கல்வி வச­திகள் மற்றும் வாழ்­வா­தா­ரத்­திற்­கான தொழில் வாய்ப்பு வச­திகள்.
உழைக்கும் பிள்­ளை­களை இழந்த வயோ­திபப் பெற்­றோ­ருக்­கான பரா­ம­ரிப்புத் திட்­டங்கள்.
இடம்­பெ­யர்ந்து இன்­னமும் மீளக்­கு­டி­ய­ம­ராத அகதிக் குடும்­பங்­களை மீண்டும் அவர்­க­ளது பழைய இடங்­களில் குடி­ய­மர்­வதை விரை­வு­ப­டுத்தல்.
மீள்­கு­டி­யே­றியும் இன்னும் பழைய இயல்பு வாழ்க்­கைக்குத் திரும்­பாத ஏழைக் குடும்­பங்­களை சமூக பொரு­ளா­தார ரீதி­யாக வலுப்­ப­டுத்தல்
வேலை­வாய்ப்­பற்­றி­ருக்கும் இளம் யுவ­திகள் மற்றும் இளை­ஞர்­க­ளுக்கு அரச, அரச சார்­பற்ற , தனியார் நிறு­வன மற்றும் சுய­தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல்.
அவ­ய­வங்­களை இழந்து உடல் ஊன­முற்­ற­வர்­க­ளுக்கு வாழ்­வா­தார வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் சமூ­க­நல மேம்­பாட்டுத் திட்­டங்கள்.
யுத்­த­கா­லத்தில் அழிக்­கப்­பட்ட கிரா­மியப் பொரு­ளா­தா­ரத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்­புதல்.
தமிழ்ப் பிர­தே­சங்­களில் நலி­வுற்­றி­ருக்கும் மீன்­பிடி மற்றும் விவ­சாயத் தொழில்­களை மேம்­பா­ட­டையச் செய்தல்.
பாரம்­ப­ரியக் குடிசைக் கைத்­தொ­ழில்­க­ளையும் மற்றும் ஏனைய சிறுகைத் தொழில்­க­ளையும் சிறு­வர்த்­தக முயற்­சி­க­ளையும் ஊக்­கு­விப்­ப­தற்­கான நிகழ்ச்சித் திட்­டங்கள்.
அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான துரித நட­வ­டிக்­கைகள்.
காணாமல் போனோர் சம்­பந்­த­மாக மனி­தா­பி­மான மற்றும் சட்ட நட­வ­டிக்­கைகள்.
வன்­செ­யலால் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க­ளுக்­கான பொருத்­த­மான நிவா­ரண மற்றும் நட்­ட­ஈட்­டுக் கொடுப்­ப­னவுத் திட்­டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்துவோம்..