மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் கிழக்கு மாகாண கூத்துப் பெருவிழாவும், கூத்துப் போட்டியும் - 2015


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திளைக்களம் நடத்தும் 2015ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கூத்துப் பெருவிழாவும் கூத்துப் போட்டியும் நாளை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது. 

மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெறும் இக் கூத்துவிழா, போட்டிகள் நாளை வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்திலும், 25ஆம் திகதி புதுக்குடியிலுப்பு கண்ணகிஅம்மன் ஆலய முன்றலிலும் நடைபெறவுள்ளன.

முதல் நாள் நிகழ்வில் முதன்மை அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சி.மௌனகுரு, புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய அதிபர் வே.தட்சணாமூர்த்தி, கௌரவ அதிதிகளாக கவிஞர் மு.கணபதிப்பிள்ளை, பேரிகைக் கலைஞர் கா.பரசுராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இரண்டாம் நாள் மாலை 5.45க்கு நடைபெறும் நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ;.சிறிநேசன், புதுவை அமைப்பின் தலைவர் மா.சதாசிவம், கண்ணகை அம்மன் ஆலய தலைவர் அ.குலேந்திரராசா, கொளரவ அதிதிகளாக தலைக் கூத்துக் கலைஞர் கு.பொன்னம்பலம், கிராமியக்கலைஞர் சி.தங்கராசா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 

இறுதி நாளான மூன்றாம் நாள் சனிக்கிழமை மாலை 5.45க்கு நடைபெறும் நிகழ்வில், முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.எல்விக்கிரம ஆராய்ச்சி , சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் க.சுகிஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக கவிஞர் தேனூரான், ஓவியர் ஈ.குலராஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த மூன்று நாள் நிகழ்வுகளிலும் கலை நிகழ்வுகள், வடமோடிக் கூத்து ஆற்றுகைகள், தென்மோடிக் கூத்து ஆற்றுகைகள் நடைபெறவுள்ளன.