மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 207 ஆவது வருடாந்த திருவிழா இன்று (18) வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் இன்றைய நவநாள் பூசைகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அருட்தந்தை பேதுரு ஜீவராஜ் அவர்களும் கலந்துகொண்டார்.
இன்றையதினம் 1ம் நாள் இடம்பெற்ற விழாவினை பாத்திமா மாதா குழுவினர் சிறப்பித்தனர்.
மாதாவின் 2ம் நாள் திருவிழாவினை லூரத்து மாதா குழுவினரும், 3ம் நாள் வேளாங்கன்னி மாதா குழுவினரும், 4ம் நாள் காணிக்கை மாதா குழுவினரும் 5ம் நாள் சதா சகாய மாதா குழுவினரும், 6ம் நாள் ஆரோக்கிய மாதா குழுவினரும், 7ம் நாள் விழாவினை அமல உறபவ மாதா குழுவினரும் தொடர்ந்து 25ம் திகதி பாலமீன்மடு குழந்தை யேசு ஆலயஇறைமக்களும்,
26ம் திகதி சனிக்கிழமை பொது நவநாளாகவும் அன்றையதினம் காலை கூட்டுத் திருப்பலி ஆயர் கலாநிதி ஜேசப் பொன்னையா அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
மறுதினம் 27 ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இறுதி நாள் காலை திருநாள் கூட்டுத் திருப்பலி அருட்தந்தை ஐ.ரஜிவா அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.