மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டுப் பரீட்சைகளில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவானது இன்று வித்தியாலய அதிபர் எஸ்.கோபாலபிள்ளை தலைமையில் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம், பிரதக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




















