புனித மிக்கேல் கல்லூரியின் 'மைக் வோக்' நடைபவனி - MIKE WALK 2015

(Sivam)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 142 ஆவது ஆண்டை முன்னிட்டு 'மைக் வோக்' நடைபவனி மட்டக்களப்பு நகரில் இன்று சனிக்கிழமை (26) நடைபெற்றது.

பாடசாலை கல்வியில், விளையாட்டில் மற்றும் ஏனைய செயல்பாடுகளில் வெற்றி பெற்ற கேடயங்கள், கிண்ணங்கள், சாரணர், மற்றும் சவால் சவால் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட விருதுகளை சுமந்த வாகன ஊர்தி  ஊர்வலத்தில் கலந்து கொண்டமை விசேட சிறப்பம்சமாகும்.
பாடசாலையிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் சென்றல் வீதி, திருமலை வீதி, தாமரைக்கேணி வீதி, அரசடிச் சந்தி, பார் வீதி மீண்டும் திருமலை வீதி வளியாக பாடசாலையை வந்தடைந்தது.