(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாண்டியடி பிரதேசத்தில்; கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரின் வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இரவு பொலிசார் சுற்றிவளைத்த போது அங்கிருந்து 400 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் பெண் வியாபாரி தப்பி ஓடியுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து தாண்டியடி பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் குறித்த வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டபோது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பெண்வியாபாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதுடன் வியாபாரத்திற்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை மீட்டனர்
இச் சம்பவத்தில் தப்பி ஓடியுள்ள பெண் கஞ்சா வியாபாரியை தேடி பொலிசார் வலைவீசி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்












