கடந்தகால யுத்தத்தினால் கணவனை இழந்த பெண் தலமைதாங்கும் குடும்பங்களைச்சேர்ந்த பெண்களுக்கு சுயதொழிலுக்கான உதவியளிக்கும் நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
மகளீர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் தலமைதாங்கும் இரண்டு குடும்பங்களுக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் இவ் உதவி வழங்கப்பட்டது.
இரண்டு குடும்பங்களுக்கும் தலா 30000/= வீதம் காசோலையாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரசே செயலாளர் எஸ்.ராஜ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
இதன்போது மகளீர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.












