வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் 40 க்கும் மேற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.


இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு இரத்தவங்கி பொறுப்பு வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.