தான்தோன்றீஸ்வரப் பெருமானுக்கு கலிங்ககுல சிவவிழா (video)

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரப் பெருமானுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் இன்று (25) கலிங்ககுடியினரால் மிகச்சிறப்பாக திருவிழா நடாத்தப்பட்டது.

மேளதாளம் முழங்க கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் என நேர்த்திகளை நிறைவேற்றியவாறு அரோகரா கோசமிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ எம்பெருமான் பரிவாரத்தெய்வங்களுடன் வீதியுலா வந்த காட்சி சிறப்பாக காணப்பட்டது.