பாழடைந்த கிணற்றினுள் சடலம் மீட்பு


(சிவம்) கொக்குவில் திராய்மடு பகுதியில் பாழடைந்த கிணற்றினுள் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு நீதவான் நீதி மன்ற நீதிபதி எம்.என். அப்துல்லா இன்று திங்கட்கிழமை மாலை ஸ்தலத்திக்கு விஜயம் செய்து மேற்கொண்டார்.

கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். உவைஸ் குற்றங்களைக் கண்டறியும் விசேட பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பதிகரி கே. ரவிச்ந்திரன் ஆகியோருடன் சம்பவம் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்த நீதிபதி உடனடியாக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாகை;கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
;
84 வயதுடைய நேசதுரை பேர்னாட் என்பரது மேற்படி சடலம் மீதான விசாரணைகளை கொக்குவில் பெரிசார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியில் வந்ததாகவும் இன்றுவரை வீடு திரும்பல்லை எனவும் அவரது மனைவி நீதிபதியிடம் தெரித்தார். 





;