கிழக்குப் பல்கலைக்கழகம் கல்லடியில் வண்ணமும் வடிவமும் ஓவியக் கண்காட்சி

--டினேஸ்--
மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத் தொழிநூட்பக் கலைத்துறையினரால் இன்று 16.09.2015 வண்ணமும் வடிவமும் கட்புலக் கலைகளின் கண்காட்சியானது சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் (பணிப்பபளார்)  தலைமையிலும் கட்புலத் தொழிநுட்பக் கலைத்துறை இனணப்பாளர்  திரு. ர.பிராகஸ் (கண்காட்சி ஏற்பாட்டாளர்) உதவியுடனும் இடம் பெற்றது. 

இதற்கு பிரதம அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதி, சதுர்புஜான் நந்த ஜீ - ராமகிருஜ்ணமிசன், Fr. Joshep Merry - முகாமைத்துவ சபை உறுப்பினர் Dr.k..பிரேம்குமார் - சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக முன்னால் பணிப்பாளர், பேராசிரியர் சிவராஜா - விவசாய பீடாதிபதி, திருமதி.தவமணிதேவி அருள் நந்தி - நூலகர்,  வே.தவராஜா - பிரதேச செயலாளர், பகீரதன் - பதில் பதிவாளர், Dr.விஜயகுமார் - பிரதிப் பதிவானர், கிறிஸ்டி - சிரேஸ்ட உதவிப் பதிவானர், ஜெயவர்த்தன் - சிரேஸ்ட உதவிப் நிதியாளர், வடுகெதர - உதவிப் பதிவாளர், திருமதி தட்சணாமூர்த்தி - இசை நடனக் கல்லூரியின் முன்னால் அதிபர்,
  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
இன்றைய முதலாம் நாள் கண்காட்சின் போது மட்டக்களப்பின் பல  பாடசாலைகளில் இருந்தும் மாணவர்களும் வருகைதந்திருந்தனர்.
கண்காட்சியை பார்வையிட்ட பிரதம விருந்தினர்கள் இக் கண்காட்சி தொடர்பான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இக் கண்காட்சியை பார்வையிட அன்புடன் அழைக்கின்றனர்  கல்லடி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின்
பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் (பணிப்பபளார்),
திரு. ர.பிராகஸ் (கண்காட்சி ஏற்பாட்டாளர்)
இனணப்பாளர் கட்புலத் தொழிநுட்பக் கலைத்துறை
பதிவாளர்,கல்விசார், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள்.