சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பதில் பிரதம அத்தியட்சகர் எச்.அருள்வாணன் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான திருமதி எம்.ஐ.எம்.சபீனா, பி.சுசிதரன், எல்.ஜெயசுதாகரன் சர்வ மத தலைவர்களான கௌசீலன் குருக்கள், மௌலவி எம்.பி.எம்.பாஹீம். அருட்தந்தை லோரன்ஸ் உட்பட சமய பிரமுர்கள் கலந்து கொண்டு ஆன்மீக விழிப்பூட்டல் நிகழ்த்தினர்.
சிறைக்கைதிகளின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. பெருமளவிலான சிறைக்கைதிகள் பெரும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.
















