கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) ஜெனிவா பயணமானார்.
நேற்றைய தினம், தான் பயணமானதாகவும், நடைபெற்றுவரும் இலங்கையின் தமிழ்ர் பிரச்சினைகளை முக்கியத்துவப்படுத்திய ஐ.நா அமர்வுகளையும், மனித உரிமைப் பெரவை வாக்களிப்புகளையும் நேரடியாகப் பார்வையிடுவதற்காகவும் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பல்வேறுபட்ட கேள்விகளுக்கு இம்முறை நடைபெற்று வருகின்ற ஐ.நா அமர்வுகள் பதிலை வழங்கும் என்ற வகையில் தானும் ஜெனிவாவுக்குப் பயணமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.













