பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை மற்றும் பெயர்ப்பலகை திரை நீக்க நிகழ்வு

பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை மற்றும் பெயர்ப்பலகை திரை நீக்க நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மமே/பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நீண்டகாலமாக குறைபாடாக இருந்துவந்த பாடசாலையின் முகப்பு வாசல் பெயர்ப்பலகையும், மற்றும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி சிலையும் அக்கிராமத்தைச்சேர்ந்த பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுநலன் விரும்பிகள், ஆசிரியர்கள் அனைவரது ஒத்துழைப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந் நிகழ்வு 11.09.2015 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாடசாலையின் கடமை நிறைவேற்று அதிபர் சு.ரவிசங்கர் தலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பானவரும் , பாடசாலையின்  PSI  இணைப்பாளருமான க.ஹரிகரராஜ் அவர்களும், மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் கிராமசேவை உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், சங்கங்களின் தலைவர் செயலாளர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.