இது
தொடர்பில் நேற்றுக்காலை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில்
இடம்பெற்ற கலந்துரையாடலில் கிராமமட்டங்களில் சேவையாற்றும் அரச பணியாளர்களான பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,
திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
மருத்துவ மாதுக்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களுக்குப்
பொறுப்பான உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில்
நேரடிக் களப்பரிசோதனைகள் இடம்பெறவுள்ள பிரதேசங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதுடன்,
பொதுமக்களோடு கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள், வழங்கப்படவுள்ள அறிவித்தல்கள்
மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்
அதிகாரிகளால் உடனடியான பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
நேற்றையதினம்
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று - 7/3, அக்கரைப்பற்று - 8/1, அக்கரைப்பற்று
- 8/2 மற்றும் அக்கரைப்பற்று - 9 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள பொதுமக்களின்
வீட்டுச் சூழல்களில் நடாத்தப்பட்ட பரிசோதனைகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக டெங்கு
கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் கே.கிரிஷாந்தன் தலைமையில்
கிராம உத்தியோகத்தர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், திவிநெகும
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதோடு, குறித்த கிராமசேவகர் பிரிவுகளுக்குப்
பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்,
இராணுவ சிப்பாய்களும் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த
பரிசோதனைகளின்போது நுளம்புகள் பெருகக்கூடியவகையில் பொதுமக்களின் குடியிருப்புகளை
அண்டிய சூழலைக் கொண்டிருந்த ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின்
உரிமையாளர்களைக் கொண்டு உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டதுடன், கவனிப்பாரற்ற
காணிகள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களுக்கு எழுத்துமூல எச்சரிக்கைக்
கடிதங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
இப்பரிசோதனைகள் மேற்படி உத்தியோகத்தர்கள் குழுவினரால் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய கிராமசேவகர் பிரிவுகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பரிசோதனைகள் மேற்படி உத்தியோகத்தர்கள் குழுவினரால் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய கிராமசேவகர் பிரிவுகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












