மட்டக்களப்பு திருச்செந்தூர் அருள்மிகு முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்

(சிவம்)
ஈழத்துச் திருச்செந்தூர் என அழைக்கப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் அருள்மிகு முருகன் ஆலயவருடாந்த தீர்த்தோற்சவம்  நேற்றுசனிக்கிழமை (12) கல்லடி சமுத்திரத்தில் நடைபெற்றது.

நேற்றுகாலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜை இடம்பெற்று பொற்சுண்ணம் இடித்து தீர்hமாடுவதற்காககடற்கரை நோக்கிப் புறப்பட்டது.


கடற்கரையில் தீர்த்தோற்சவக் கிரியைகள் ஆலய பிரதம குரு ஸபரீச ஷைதன்யர் தலைமையில் நடைபெற்றன

ஆலய தலைவர் எம். மகேஸ்வரன்> செயலாளர் ஏ.ரவீந்திரன் உட்பட பல அடியார்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு தீர்த்தமாடி தங்கள் நேர் கடன்களை நிறைவேற்றினர்.