தான்தோன்றியப்பன் வலம் வரும் தேருக்கு குத்துக்கால் நாட்டும் நிகழ்வும் படையாட்சி குடி மக்களின் திருவிழாவும்


(படுவான் பாலகன்)  கிழக்கின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு குத்துக்கால் நாட்டும் நிகழ்வு இன்று
நடைபெற்றது. 

கடந்த தேரோட்டத்தை அடுத்து நிறுத்தி மறைக்கப்பட்ட தேர் இன்று அதன் மறைப்புக்கள் அகற்றப்பட்டு காலை தேருக்கான குத்துக்கால் நாட்டப்பட்டு இன்றிலிருந்து அதன் அலங்கரிப்பு மற்றும் முடிசூடும் வேலைகள் நடைபெறவுள்ளன. இன்றைய படையாட்சி குடி மக்களின் திருவிழாவன்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைகள் தொடந்து கலிங்ககுடி, உலோகிப்போடிகுடி திருவிழா நாட்களில் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு எம்பெருமான் தேரேறி 27.09.2015 ஞாயிறன்று வலம் வரவுள்ளமை குறிப்பிடக்கூடியது.

அத்தோடு இன்றைய (24) படையாட்சிகுடி மக்களின் திருவிழாவினை சிறப்பித்து மாலை 8 மணிக்கு தான்தோன்றீஸ்வரர் அரங்கில் குடித்தலைவர் திரு.இ.சாந்தலிங்கம் (JP, ஆலய வண்ணக்கர்) அவர்களின் தலைமையில் படையாண்டவெளி மாருதம் கலைக்கழகம் வழங்கும் மங்கள இரவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.