கல்வி அமைச்சால் நடத்தப்படும் கணித நாடகப் போட்டிகளின் கிழக்கு மாகாண மட்டத்திலான போட்டிகள் கடந்த 26.09.2015 ஆந் திகதி சனிக்கிழமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலும், உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியிலும் முறையே சிரேஸ்ட பிரிவினருக்கும் ஆரம்பப் பிரிவினருக்கும் நடைபெற்றன.
இதில் சிரேஸ்ட பிரிவில் கல்குடா வலயத்தைப் பிரதிநிதித்துப்படுத்திப் பங்குபற்றிய வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நாடகம் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இரண்டாமிடத்தை மட்டக்களப்பு வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வின்சன்ற் தேசிய பாடசாலையின் நாடகமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பப் பிரிவில் வின்சன்ற் தேசிய பாடசாலையின் நாடகம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.













