ஆலையடிவேம்பு
பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வுகளுக்குப் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர்
வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாகப் பிரதித் திட்டமிடல்
பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், மேலதிக மாவட்டப்
பதிவாளர் எம்.பிரதீப் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்
ஏ.தர்மதாச ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
முதலில்
மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரம் வரையும் போட்டியில் 26 முன்பள்ளிகளிலிருந்து
கலந்துகொண்ட 50 மாணவர்களில் 10 மாணவர்கள் அதிதிகள் குழுவினரால் வெற்றியாளர்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில்
மிகவும் சிறப்பாகவும், பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்ற சுகந்தன் தஸ்மிதா
மற்றும் கங்காதரன் பிதிஸ்காந்த் ஆகிய சிறார்களது சித்திரங்கள் தேசிய ரீதியில் மிக விரைவில்
இடம்பெறவுள்ள கண்காட்சி நிகழ்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், போட்டியாளர்கள்
இருவரும் அதிதிகளின் விசேட வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.
அத்துடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுப்பொதிகளும்
அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறார்களின் கலை நிகழ்வுகளும் அங்கு
இடம்பெற்றிருந்தன.
மேலும் ஆலையடிவேம்பு
பிரதேச முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தி வரலாற்றில் இவ்வாறான ஒரு போட்டி நிகழ்ச்சி
பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்டமை இதுவே முதல்முறை என்பது இங்கே
குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.












