(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தற்போது தேரோட்டத்தைக்காண அடியார்கூட்டம் திரளாக கூடியிருக்கின்றமையினை காணக்கூடியதாகவுள்ளது.
அடியார்களின் நலன் கருதி பல்வேறு அமைப்புக்களால் தாகசாந்தி வழங்கப்பட்டு கொண்டிருப்பதைக் காணலாம்.
தற்போது எம்பெருமான் தேர் பவணி வருவதற்கான கிரியைகள் இடம்பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இக்கிரியைகள் அனைத்தும் சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தம் குருக்கள் (பிரதம குரு) அவர்களால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.












