கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் திருக்கோயில் பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தல் சம்மந்தமாக தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து மாகாண சபையில் உரையாற்றிய போது சபையினாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோமாரி வைத்தியசாலை, அன்னமலை வைத்தியசாலை, பெரியநீலாவணை வைத்தியசாலை போன்றவையும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என மேலும் உரையாற்றினார்.












