வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 207 ஆவது வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் திருப்பலி நிகழ்வுகள் இன்று(27) காலை சிறப்புடன் இடம்பெற்றது.
இதன்போது பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் உட்பட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டனர்.
இன்றைய நிகழ்வில், கொடிஇறக்கம் இடம்பெற்று விஷேட நிகழ்வாக வருடந்தோறும் இடம்பெறும் அமிர்தகழி வாவியூடாக கப்பலேந்தி மாதாவின் படகு ஊர்வலம் இடம்பெற்றது.
தொடர்ந்து கப்பலேந்தி மாதா ஆலய நிருவாகத்தினாலும், அமிர்தகழி இளைஞர் கழகத்தினர் மற்றும் நாவலடி மக்கள் ஆகியோரால் ஆலயத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.












