மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர் யார்? உங்கள் கருத்து என்ன?

தற்போதயை அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வொரு மாவட்டத்தையும் வெற்றிகொண்ட கட்சிகளுக்கே குறித்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டியுள்ள நிலையில் அந்த மூன்று மாவட்டங்களிலும் அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைவசம் உள்ள நிலையில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமைப் பதவிக்கு வரவேண்டியவர் யார்? எனும் விடயம் சார்பாக மக்கள் மத்தியில் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளமையினை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் உங்கள் கருத்து என்ன? யார் பொருத்தமானவர்?.........................

1.     பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனா?
2.     பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனா?

3.      பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். வியாளேந்திரனா ?
உங்கள் பதிவை (1) (2) (3) எனும் இலக்கத்திலோ அல்லது அவர்களின் பெயரிலோ முகப்புத்தக கருத்தில் பதியலாம்.