(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாணசபைக்கு முன்பான அம்பாரை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் இன்று புதன்கிழமை (30) திகதி தமக்கு உடன் நியமனங்கள் வழங்கவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
இவ் போராட்டம் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பித்தது இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவேண்டும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வேலை வழங்கப்படவேண்டும் . அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிப்பு நிறுத்தப்படவேண்டும் இவ் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இவற்றுக்கு தீர்வு கிட்டும்வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் இவ் போராட்டத்தில் ஈடுபட்டுவருக்கின்றனர்
கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக இவ் மாகாணசபைக்கு முன்பாக இரண்டு தடைவ கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளதாகவும் இதன்போது கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலாளர் முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் முதலமைச்சர் மிக விரைவில் தீர்வு தருவதாக அளித்த வாக்குறிதிகளையடுத்து கவனஈர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது இந்த நிலையில் மாதங்கள் 5 க்கு மேலாகிவிட்ட நிலையில் இதுவரை எமக்கு எந்தவிதமான நியமனங்களும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் முதலமைச்சரை இனி நாங்கள் நம்பத் தயாராகவில்லை நடவடிக்கையும் எனவே இதில் மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் அதேவேளை எமக்கு உடன் தீர்வு வழங்கப்படும் வரை தொடர்ந்து உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அம்பாரை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர்.எம்.திலீபன். அதன் செயலாளர் பா.தயட்சாயன் ஆகியோர் தெரிவித்தனர்;












