(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேரோட்டப் பெருவிழா இன்று(27) ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க பிள்ளையார் தேரில் விநாயகரும், சித்திரத்தேரினில் பார்வதி சமேதரராய் சிவனும் ஆலயத்தை வலம் வந்த அற்புதக்காட்சி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.