பல ஆண்டுகளின் பின்னர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வர பெருமானுக்கு பணிக்கனார் குடி மக்களின் திருவிழா

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருவிழாக்களின்
ஒழுங்குமுறைக்கமைய பணிக்கனார்குடி மக்களின் திருவிழா நேற்று (23) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 

இக்குடியினர் தமது ஆட்பலவினம் ஏற்பட்டதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவிழாக்களை முன்னின்று செய்யாது விட்டிருந்த போதும் தமது குடியினரை ஒன்றித்து இவ்வாண்டு எம்பெருமானுக்குரிய திருவிழா மிகச்சிறப்பாக நடாத்தியதுடன் ஆலய குருமாரையும், நிருவாக சபையினரையும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்புக்களையும் செய்தனர்.