முன்பிள்ளைப் பருவ சிறார்களின் தேசிய மட்ட சித்திரக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா

எமது நாட்டு சிறுவர்களின் கலையாற்றல்ளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் கடந்த 03.09.2015 ஆம் திகதி அன்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஊடாக முன்பிள்ளைப் பருவ சிறார்களின் 'அருண தகின ரடா 2015' சித்திர கண்காட்சி கொழும்பு தேசிய கலாபவனத்திலும் பரிசளிப்பு விழா கிரின்பாத் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசிய மட்டத்தில் தெரிவாகிய 500 சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அன்றைய தினம் தெரிவாகிய முன்பிள்ளைப் பருவ சிறார்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பங்குபற்றிய சிறார்களில் இருந்து 21 சிறார்களின் சித்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொருட்களும் அன்றைய தினம் வழங்கி கௌரவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.