முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு இறைவன் துணைபுரிய வேண்டும் - பைசல் காசிம்

இம்முறை எமது நாட்டிலிருந்தும் முழுவுலகிலிருந்தும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஹாஜிகளின் நோக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இச்சந்தரப்பத்தில் பிராத்திப்பதாக சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைசல் காசிம் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது,
இறைத்தூதர் இப்றாஹிம் நபியின் வாழ்க்கை முழுவதும் இறைவனுக்கு கட்டுப்பட்டு அடிபணிந்த படிப்பினையை எமக்கு உணத்துகின்றது. மக்காவில் ஒன்றுகூடிள்ள பல இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் மன உணர்வுகள் இப்றாஹிம் நபியின் தியாகங்களுக்கு உயிரூட்டுகின்றன.
உலகின் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் முஸ்லிம்களின் கலிமாவின் மூலம் (லாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மது ரசூலுல்லாஹ்) அவர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளார்கள். மொழி, தேசம், நிறம், நாடு என்ற புவியியல், பிறப்பியல் வேறுபாடுகளை மறந்து இறைவனுக்காக மக்காவிலே ஒன்றுகூடியுள்ள முஸ்லிம்களின் தாங்கள் கட்டுக்கோப்பான சமூகம் என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கின்றனர்.


இவ்வாறான கட்டுகோப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகங்கள் ஊடாக முஸ்லிம்களின் அரசியல் இலட்சியத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனையாகும். பட்டம், பதவி, ஆட்சி, அதிகாரங்களுக்காக பிரதேசங்களை தூண்டி மக்களை திசை திருப்பும் முயற்சிகளை இம்முறை தேர்தலில் முஸ்லிம்களின் நிராகரித்துள்ளமையும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான வெளிப்பாடுகளே.
சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் இப்றாஹிம் அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது மகன் இஸ்மாயில் நபியையும் மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும் மக்காவில் தனியே விட்டுச்சென்ற போது அனைத்து பொறுப்புக்கக்கும் அல்லாஹ்வையே பாரம் சாட்டிவிட்டுச்சென்றார்கள்.
இறைவன் இப்றாஹிம் நபியை கடுமையாக சோதித்தாலும் தன் மீது தனது அடியான் இப்றாஹிமுக்கு உள்ள நம்பிக்கையை கைவிடவில்லை என்பது இஸ்லாத்தின் வரலாற்றுச் சான்றாகும். இவ்வாறான வரலாறுகளை நன்றாக முன்வைத்தும், முன்னெடுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் இலக்கை நோக்கி வீறு நடை போடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.